

பிகார், ஆந்திரத்தைப் போன்று கர்நாடகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய மக்கள் விரும்புவதாக பாஜக மாநில தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இல்லாத கர்நாடகமே மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் அதனையே மக்களும் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் மக்கள் நலனை மறந்து ஆளும் கட்சிக்குள்ளேயே முதல்வர் பதவி மாற்றத்திற்கு குதிரை பேரம் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக ஆர். அசோகா பேசியதாவது, ''நாட்டின் பல பகுதிகளில் இருந்து காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டதைப் போன்று கர்நாடகத்திலும் காங்கிரஸ் நிராகரிக்கப்படும்.
பிகார், ஆந்திரத்தைப் போன்று கர்நாடகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைய மக்கள் விரும்புகின்றனர். அதற்கான பொத்தானை அழுத்துவதற்கு மக்கள் தயாராக உள்ளனர். அவர்கள் தேர்தலுக்காகத் தயாராகி வருகின்றனர்'' எனக் குறிப்பிட்டார்.
கர்நாடகத்தில் டி.கே. சிவகுமார் முதல்வர் பதவிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அசோகா, ''இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் கட்சியில் பதவியில் இருக்க யார் விரும்புவார். யாரும் விரும்பமாட்டார்கள். பிகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் பலவீனமான கட்சியாகிவிட்டது'' என விமர்சித்தார்.
இதையும் படிக்க | 37 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகன்! எஸ்ஐஆர் மூலம் கண்டுபிடிப்பு! எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.