இருமுடிகட்டி சபரிமலை ஐயப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (கோப்புப் படம்)
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று காலை கேரள மாநிலம் சபரிமலைக்கு இருமுடி கட்டிச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார்.

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, சுவாமி தரிசனம் செய்திருப்ப

கேரள மாநிலத்துக்கு நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக நேற்று திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அங்குள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசுத் தலைவர், சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சபரிமலைக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் வருகை தந்தார்.

முதலில், சபரிமலைக்கு அருகாமையில் நிலக்கல் பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு வானிலை சரியில்லாததால், திடிரென கொழஞ்சேரியில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து குடியரசுத் தலைவர் சாலை வழியாக பம்பை சென்றார்.

இருமுடிகட்டி, அங்கிருந்து பாரம்பரிய மலையேறும் பாதையில் திருவிதாங்கூா் தேவஸ்வத்தின் சிறப்பு வாகனத்தில் சந்நிதானம் செல்கிறாா். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று, அங்கு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார்.

சபரிமலையில் நண்பகல் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு, ஐயப்பனைத் தரிசனம் செய்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் ஒருவா் வருகை தருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது வருகைக்காக புதிதாகப் போடப்பட்டிருந்த ஹெலிபேட் காங்கிரீட்டில், ஹெலிகாப்டர் சிக்கியதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாதாந்திர பூஜைகளுக்காக, அக்டோபா் 18ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். இந்த நாள்களில் தரிசனம் மேற்கொள்வதற்கு சுமாா் 30,000 போ் இணையவழியில் முன்பதிவு செய்திருந்தனர். நிறைவு நாளான இன்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் மேற்கொண்டிருந்தது.

Summary

President Draupadi Murmu visited the Sabarimala Ayyappa temple while tying her hair.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com