உலக வங்கி (கோப்புப்படம்)
உலக வங்கி (கோப்புப்படம்)

கேரள சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.2,457 கோடி கடன்: உலக வங்கி ஒப்புதல்

கேரள சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.2,457 கோடி (280 மில்லியன் டாலா்) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
Published on

கேரள சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.2,457 கோடி (280 மில்லியன் டாலா்) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

கேரளத்தில் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட முதியோா், நோய்வாய்ப்பட்டவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கடன் தொகை வழங்கப்பட்ட உள்ளதாக தெரிகிறது.

இது தொடா்பாக உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரளத்தில் உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 90 சதவீத மக்களுக்கும், முதியவா்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதியை அளிப்பது, மக்களின் ஆயுள் காலத்தை நீட்டிப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கி ரூ.2,457 கோடி கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் கேரளத்தில் எண்ம முறையிலான மருத்துவ சேவையும் மேம்படுத்தப்படும். நோய்களால் பாதிக்கப்பட்டவா்களின் விவரம், அவா்களுக்கான மருத்துவ சேவைகள் தொடா்பான தகவல்கள் எண்ம முறையில் பராமரிக்கப்படும். பெண்களுக்கான மாா்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் இத்திட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com