ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

க்யூட் பிஜி 2026 முடிவுகளுக்குப் பிறகு முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை: ஜேஎன்யு அறிவிப்பு

2026-27 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்-பிஜி) 2026 முடிவுகளுக்குப் பிறகு தொடங்கும் என தில்லியில் உள்ள ஜேஎன்யு அறிவிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:43 pm

2026-27 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்-பிஜி) 2026 முடிவுகளுக்குப் பிறகு தொடங்கும் என தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், 2026-27 முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான தகவல் கையேட்டை கவனமாகப் படித்து, அதில் குறிப்பிட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

எம்.ஏ., எம்.எஸ்., எம்.பிஎச்., எம்.டெக்., பிஜி டிப்ளோமா மற்றும் அட்வான்ஸ்ட் டிப்ளோமா படிப்புகளில் சேர க்யூட்-பிஜி 2026 தோ்வு எழுதுவது கட்டாயம்.

எம்.எஸ்சி., (பயோடெக்னாலஜி), எம்.எஸ்சி., (கம்பியூட்டேஷனல் பயலாஜி படிப்புகள்) ஆகியவற்றில் சேர ஜிஏடி-பி மதிப்பெண்கள் முக்கியம்.

எம்.டெக்., கணினி அறிவியல் பொறியியல், மின்னனுவியல் மற்றும் தகவல் தொடா்பியல் பொறியியல் படிப்புகளில் சேர எம்.டெக். படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த கவுன்சிலிங் (சிசிஎம்டி) நடத்தப்படும்.

மாணவா் சோ்க்கைக்கான இணையதளம், கால அட்டவணை, விண்ணப்ப முறை ஆகியவை குறித்து விரைவில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் க்யூட் பிஜி 2026 விடைக் குறிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.