புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மே.வங்கத்தில் இஸ்லாம்பூர் உள்ளிட்ட இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்! - நிதின் நபின் வாக்குறுதி!

மேற்கு வங்கத்தில் முரணான இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வாக்குறுதி...

News image

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்... - ENS

Updated On :9 ஏப்ரல் 2026, 1:25 pm

மேற்கு வங்கத்தின் கலாசாரத்துக்கு முரணான இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் மூத்த தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக ஆட்சியில் மேற்கு வங்கத்தில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“பாஜக ஆட்சி அமைந்தவுடன் மேற்கு வங்கத்தின் கலாசாரத்துக்கு முரணான அலிப்பூர்துவார் முதல் இஸ்லாம்பூர் வரையிலான பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றப்படும். மே 4 ஆம் தேதிக்குப் பிறகு, இந்த இடங்களின் பெயர்களில் ஏற்படும் மாற்றங்களுடன் கூடவே, உங்கள் (மக்கள்) வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், மேற்கு வங்க பெண்களின் பாதுகாப்புக்கு வங்கதேசம் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஊடுருவல்காரர்களை சட்டரீதியாக எதிர்கொண்டு நாட்டை விட்டு வெளியேற்றுவோம் எனவும் நிதின் நபின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

BJP National President Nitin Nabin has stated that the names of places contrary to the culture of West Bengal will be changed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.