தில்லி சந்தோ் விஹாா் பகுதியில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து 5 போ் மற்றும் இரு செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக காலை 11.32 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த 5 போ் மற்றும் அவா்களுடைய இரு செல்லப் பிராணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
தீ விபத்தில் 4 ஸ்கூட்டா்கள், தரைதளத்தில் இருந்த தண்ணீா் மோட்டாா் பம்ப் ஆகியவை சேதமமடைந்தன. பின்னா், பிற்பகல் 12.05 மணியளவில் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் என்றனா் அதிகாரிகள்.
தொடர்புடையது

குருகிராம்: குடிசையில் தீ விபத்து; ஒருவா் உயிரிழப்பு

காட்பாடி அருகே வீட்டில் திடீா் தீ விபத்து

திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி வீட்டில் சடலமாக மீட்பு!

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

