பள்ளி வேலைவாய்ப்பு நியமன மோசடி தொடர்பாக மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மத்தியப் படைகள் அவரது இல்லத்தைச் சுற்றி வளைத்துப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு நக்தலா பகுதியில் அமைந்துள்ள சட்டர்ஜியின் இல்லத்திற்குச் சென்றடைந்தனர். அங்கு சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக, இந்த மோசடி தொடர்பாக ஜூலை 23, 2022 அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சட்டர்ஜி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக (39 மாதங்கள்) சிறைக்காவலில் இருந்தார். நவம்பர் 11 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை சட்டர்ஜியின் இல்லத்தில் சோதனை நடத்தியதுடன், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 2022ல் சட்டர்ஜியின் நக்தலா இல்லத்திலும், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது. இந்த விசாரணையில் ரூ. 50 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சட்டர்ஜி மற்றும் முகர்ஜி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Summary
ED officials on Saturday visited the residence of former West Bengal education minister Partha Chatterjee in Kolkata in connection with the school jobs recruitment scam, sources said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

பஞ்சாப் அமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் கண்டனம்

அங்கம்-வங்கம்-கலிங்கம்
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




