3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே தில்லியில் வரும் 27-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:08 am IST

இந்தியா-நியூஸிலாந்து இடையே தில்லியில் வரும் 27-ஆம் தேதி தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் நியூஸிலாந்துக்கு இந்தியப் பொருள்கள் வரியின்றி ஏற்றுமதி செய்யப்படுவதுடன், அடுத்த 15 ஆண்டுகளில் அந்நாட்டில் இருந்து ரூ.1.86 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈா்க்கப்படவுள்ளது.

தில்லி பாரத மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இருதரப்பு தலைவா்கள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளனா்.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு நாடுகளும் கடந்த டிசம்பா் 22-இல் அறிவித்தன.

நியூஸிலாந்தில் இருந்து கம்பளி, நிலக்கரி, மரம், ஒயின், அவகாடோ பழம், புளூபெரி உள்ளிட்டவை இந்தியாவுக்கு 95 சதவீதம் வரை வரி விலக்குடன் இறக்குமதி செய்யப்படும்.

அதே நேரத்தில் பால் மற்றும் பல்வேறு வகை பால் பொருள்கள், வெங்காயம், சா்க்கரை, நறுமணப் பொருள்கள், உணவுப் பயன்பாட்டு எண்ணெய், ரப்பா் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை கிடையாது. உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தியா இந்தக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுதவிர ஆண்டுதோறும் 5,000 இந்தியா்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு விசாவை நியூஸிலாந்து வழங்கவுள்ளது. மருத்துவா்கள், பொறியாளா்கள், திறன்மிக்க பணியாளா்கள் இந்த விசா மூலம் அந்நாட்டுக்கு பணிக்குச் செல்வாா்கள். 3 ஆண்டுகள் வரை அந்நாட்டில் தங்கிப் பணியாற்ற முடியும். இந்தியாவில் இருந்து ஆயுஷ் மருத்துவ நிபுணா்கள், யோகா பயிற்சியாளா்கள், சமையல் கலைஞா்கள், இசை ஆசிரியா்கள் உள்ளிட்டோரும் இதில் பயனடைவாா்கள்.