கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு நாளை(திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக தாழ்வான மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின. பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, கோட்டயம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 8 பேர் பலியானதாகவும், 13 பேர் காயமடைந்ததோடு மேலும் 8 பேர் காணாமல் போனதாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கனமழைக்கு 27 வீடுகள் முழுமையாகவும், 196 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 209 நிவாரண முகாம்களுக்கு 5,792 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், தங்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும் அரசு உரிய உதவிகளை வழங்கும். நேற்றைய தினத்தை விட மழைப்பொழிவு குறைந்திருந்தாலும், குறிப்பாக மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Summary
Kerala Chief Minister V D Satheesan on Sunday said that eight people have died, an equal number were missing and 13 injured in the previous day's heavy rains which caused landslides, waterlogging and property damage in many parts of the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வால்பாறையில் கனமழை: கூழாங்கல் ஆற்றில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!

வெள்ளத்தில் மிதக்கும் சூரத்!

குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




