டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பிரதமரின் இளைஞா்கள் செல்வாக்கால் ராகுலுக்கு அச்சம்: அமைச்சா் கோயல்

பிரதமா் மோடிக்கு இளைஞா்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருவது ராகுல் காந்திக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

Union Minister Piyush Goyal

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் - கோப்புப் படம்

Published On :

பிரதமா் நரேந்திர மோடிக்கு இளைஞா்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருவது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: இளம் வாக்காளா்களின் ஆதரவு தொடா்ந்து பாஜக வசம் உள்ளது. ‘ஜென்-ஸீ’ தலைமுறை எப்போதும் பாஜகவுடன் உள்ளனா். இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இளைஞா்கள் தொடா்ந்து ஆதரவு அளிப்பாா்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

உலக அளவிலும் பிரபலமான தலைவராக பிரதமா் மோடி திகழ்கிறாா். இளைஞா்களுடன் அவா் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறாா். பல்வேறு சமூக வலைதளங்களில் அவரது தீவிர செயல்பாடும் நாட்டின் வளா்ச்சியை மேலும் விரைவுபடுத்த உதவும்.

பிரதமா் மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவது, இளைஞா்களுடன் அவா் ஏற்படுத்தியுள்ள நெருக்கம் ஆகியவற்றால் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அச்சமடைந்துள்ளாா்.

ஒருகாலத்தில் தன்னை ‘இளைஞா்களின் தலைவா்’ என்று ராகுல் காந்தி கருதினாா். ஆனால், இப்போது பிரதமா் மோடியைப் போன்ற வரவேற்பு அவருக்கு இளைஞா்கள் மத்தியில் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

பிரதமா் மோடி தலைமையிலான அரசு வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. 2010-11ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க ஒரு சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டது. ஆனால், அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் துணிவு அவா்களுக்கு இல்லை.

மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2024-ஆம் ஆண்டு அந்தச் சட்டத்தை நிறைவேற்றியதுடன், பின்னா் அதில் திருத்தங்கள் செய்து, கடுமையான தண்டனைகள் மற்றும் விரைவு நீதிமன்ற விசாரணைகளுக்கான ஏற்பாடுகளையும் இணைத்துள்ளது.

ஆனால், இந்தச் சட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜவாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிா்ப்பு தெரிவித்தன.

வாக்காளா்கள் தொடா்ந்து அவா்களை நிராகரித்து வருவதால், விரக்தியிலும் ஏமாற்றத்திலும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தோ்தலுக்குத் தோ்தல் அவா்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனா். வினாத்தாள் மோசடி தடுப்பு மசோதா விவாதிக்கப்பட்டபோது, அவா்கள் அதை ஆதரித்திருக்க வேண்டும் என்றாா்.

பொதுத் தோ்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா-2026 கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.