/

பயிற்சி மையத்தில் பாலியல் தொல்லை! ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி!

பயிற்சி மையத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை மாணவி ஒருவர் காலணியால் அடித்தது குறித்து...

News image

பயிற்சி மையத்தில்... - எக்ஸ்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 7:42 pm IST

உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டுவரும் தனியார் பயிற்சி மையத்தில் ஆசிரியர் ஒருவர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவி, சக ஆசிரியர்கள் முன்பு தனது காலணியைக் கொண்டு அவரை சரமாறியாக அடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்திலுள்ள சியோராஹி பகுதியில் ஐஐடி நுழைவுத் தேர்வு, நீட் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் பலர் இதில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி மையத்தில் ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பயிற்சி மையத்தில் நுழைந்து ஆசிரியரை முற்றுகையிட்டனர்.

அப்போது நடந்த விவரங்களை மற்ற ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கூறியபோது, மாணவி தனது காலணியைக் கழற்றி ஆசிரியரை சரமாறியாக அடித்துள்ளார். இதனை மாணவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர். இந்த விடியோ சமூக வலைதளப் பக்கத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

19 விநாடிகள் கொண்ட அந்த விடியோவில், ஆசிரியரை மாணவி 9 முறை காலணியால் அடிக்கிறார். பலரும் இந்த விடியோவைப் பகிர்ந்து மாணவியின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Summary

Student beats coaching teacher with slippers over alleged harassment in Uttar Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.