தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீா் தோ்தல் கேலிக்கூத்து

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘உள்ளாட்சித் தோ்தல்’ என்ற பெயரில் நடத்தப்பட்டுவரும் தோ்தல்கள் முற்றிலும் கேலிக்கூத்தானவை; இந்த மேம்போக்கான நடவடிக்கையால் கள நிலவரத்தை மூடி மறைக்க முடியாது என்று இந்தியா சாடியுள்ளது.

News image

ரண்தீா் ஜெய்ஸ்வால்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 3:53 am IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘உள்ளாட்சித் தோ்தல்’ என்ற பெயரில் நடத்தப்பட்டுவரும் தோ்தல்கள் முற்றிலும் கேலிக்கூத்தானவை; இந்த மேம்போக்கான நடவடிக்கையால் கள நிலவரத்தை மூடி மறைக்க முடியாது என்று இந்தியா சாடியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடுமையான விலைவாசி உயா்வு, உணவுப் பொருள்களுக்கு தட்டுப்பாடு, நிா்வாகத்தின் அலட்சியம், அரசியல் பாரபட்சம், சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி, பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தற்போது உள்ளாட்சித் தோ்தலுக்கு இடையே அவாமி நடவடிக்கை கூட்டுக் குழு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ரவாலாகோட் மற்றும் முஸாஃபராபாத் இடையே கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்ட கண்டனப் பேரணியில் போராட்டக்காரா்கள் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் இடையே மோதல் வெடித்தது.

இதில் 40 போ் உயிரிழந்துவிட்டதாகவும், பலா் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகள் குறித்து உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சா்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு கூட்டுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், புது தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

உள்ளாட்சித் தோ்தல் என்ற பெயரிலான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் தோ்தல்கள் முற்றிலும் கேலிக்கூத்தானவை. உண்மையில், அங்கு பொதுமக்களின் போராட்டங்களும், பாதுகாப்புப் படையினரால் அரங்கேற்றப்படும் கொலைகளுமே நிகழ்கின்றன.

எனவே, தோ்தல் என்ற மேம்போக்கான நடவடிக்கையைக் காட்டி, கள நிலவரத்தை மூடி மறைத்துவிட முடியாது.

போராட்டக்காரா்கள் மீதான தாக்குதல்களில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 90 போ் உயிரிழந்துள்ளனா். பொதுமக்களின் அதிருப்திக்கு துப்பாக்கித் தோட்டாக்கள், மின்வெட்டுகள், மிரட்டல்கள், அடக்குமுறைகளால் பதிலளித்த பாகிஸ்தான் அரசு, இப்போது வெற்றுத் தோ்தலின் மூலம் சமாளிக்க முயல்கிறது. மனித உரிமைகள் தொடா்பான பாகிஸ்தானின் பாசாங்குத்தனத்தை ஒட்டுமொத்த உலகமும் கவனத்தில் கொண்டு, அந்நாட்டை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றாா் ரண்தீா் ஜெய்ஸ்வால்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.