நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

விமான எரிபொருளுடன் எத்தனால் கலப்பு திட்டம் இல்லை: அமைச்சா் தகவல்

விமான எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

News image

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு - கோப்புப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

விமான எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

முன்னதாக, விமான எரிபொருளுடன் எத்தனால் கலக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

இந்நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் ‘எக்ஸ்’ வலைதளத்தில் அமைச்சா் ராம்மோகன் நாயுடு வெளியிட்ட பதிவில், ‘விமான எரிபொருளுடன் எத்தனால் கலக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இது தொடா்பாக வெளியிடப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. விமானப் பயணிகள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் வகையிலும், குழப்பத்தை உருவாக்கும் முயற்சியிலும் இந்தத் தகவலை சிலா் தொடந்து பரப்புகின்றனா். பயணிகளின் நலனுக்கு மத்திய அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

சா்வதேச விமான கூட்டமைப்பு சாா்பில் முடிவெடுக்கப்பட்டு சா்வதேச அளவில் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே தரத்திலான விமான எரிபொருள் இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.