இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

வெளிநாடுகளில் வேலைதேடுவோர் எச்சரிக்கை! வேலைக்காகச் சென்ற பெண் விற்கப்பட்ட அவலம்!

போர்ச்சுகல் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் இந்தியப் பெண் விற்கப்பட்டது குறித்து...

Nagpur woman sold to man in Portugal

வேலைக்காகச் சென்ற பெண் விற்கப்பட்ட அவலம் - பிரதிப் படம்

Published On :

போர்ச்சுகலில் வேலைதேடிச் சென்ற இந்தியப் பெண்ணை வேலைவாங்கித் தரும் தனியார் ஏஜென்சி நிறுவனம் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் நாக்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலைதேடி வந்த நிலையில், போர்ச்சுகல் நாட்டில் வேலை இருப்பதாக ஆன்லைனில் ஏஜென்சி ஒன்றின் மூலமாகப் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஏஜென்சியை தொடர்புகொண்டு விசாரித்ததில், போர்ச்சுகல் நாட்டில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் 8 மணிநேரம் மட்டுமே பார்க்கக்கூடிய காசாளர் வேலை இருப்பதாக தனியார் ஏஜென்சியில் தெரிவித்துள்ளனர்.

மேலும், போர்ச்சுகலில் வேலைக்குச் சேர வேண்டும் என்றால், பாஸ்போர்ட், விசா மற்றும் இதர செலவுகள் என ரூ. 11 லட்சம் தேவைப்படும் என அப்பெண்ணிடம் ஏஜென்சியில் கேட்டுள்ளனர். அப்பெண்ணும் அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போர்ச்சுகலுக்கு வேலைதேடிச் சென்ற அப்பெண்ணை தொடர்புகொண்ட ஒருவர், பெண்ணிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டார். தொடர்ந்து, அப்பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டு ஓர் அறையில் இரு நாள்களாக அடைத்து வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அப்பெண்ணை ஒரு மதுபானக் கடை உரிமையாளரிடமும் விற்றுள்ளனர். மேலும், அப்பெண்ணை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். தன்னுடைய பாஸ்போர்ட்டை தருமாறு அவர்களிடம் அப்பெண் கேட்டபோதிலும், மேலும் பணம் தந்தால் மட்டுமே பாஸ்போர்ட் தருவதாய்க் கூறியுள்ளனர்.

இந்த நிலையில்தான், அவர் அங்கிருந்து தப்ப முயற்சித்து, போர்ச்சுகலின் லிஸ்பன் நகருக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்து ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்குச் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இந்தியா வந்தடைந்த பிறகு, தனக்கு வேலை வாங்கிக் கொடுத்த ஏஜென்சியை தொடர்புகொண்டபோது, மால்டாவில் வேலை வாங்கித் தருவதாக மேலும் ரூ. 3 லட்சம் கோரியுள்ளனர். ஆனால், அவர் பணம் தர மறுத்தநிலையில், அவர் மீது பொய் வழக்குகள் போடவிருப்பதாகவும், அவரின் கணவரைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து, தன்னை மோசடிக்குள்ளாக்கிய மோசடி ஏஜென்சி கும்பல் மீது அப்பெண், புணே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, மனிதர்களைக் கடத்தல், மோசடி, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைத் தேடி வருகின்றனர்.

Summary

Nagpur woman alleges Pune job firm sold her to Portugal beer shop owner

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.