தில்லியில் மாணவர்கள் மீதான காவல்துறையின் அத்துமீறல்கள் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றத்தில் முடக்கம் தொடரும் எனக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா வலியுறுத்தினார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையால் பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் தொடர்பான முக்கிய மசோதாக்களின் நிலை நிச்சயமற்றதாக உள்ளது.
இந்த நிலையில், மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை அலுவல் பட்டியலில் மேற்கூறிய மசோதாக்கள் எதுவும் இடம்பெறவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறினார்.
வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Congress leader Priyanka Gandhi Vadra on Monday asserted that the deadlock between the opposition and the government in Parliament will continue till Union Home Minister Amit Shah makes a statement over alleged police excesses on students.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் வருவதில் அமித் ஷாவுக்கு என்ன பிரச்னை? பயம் ஏன்? கார்கே கேள்வி!

பிரதமருக்கு யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை: அமித்ஷா பேச்சு
புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

நாடாளுமன்ற முடக்கம் தீருமா?
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK




