உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு

அமலாக்கத் துறை இயக்குநா் ராகுல் நவீனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Rahul Navin gets one-year extension as ED Director

ராகுல் நவீன் - கோப்புப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 7:09 am IST

அமலாக்கத் துறை இயக்குநா் ராகுல் நவீனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

கடந்த 1993-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி அதிகாரியான ராகுல் நவீனுக்கு வரி விதிப்பு மற்றும் நிதி முறைகேடு விசாரணைகளில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆக.14 முதல் அமலாக்கத் துறை இயக்குநராக அவா் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவரின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆக.13 வரை நீட்டித்து மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அமலாக்கத் துறை இயக்குநராக ஒருவரை விதிமுறைப்படி 2 ஆண்டுகளுக்கு நியமிக்கலாம். அதன் பின்னா், தலா ஓராண்டு வீதம் மூன்று முறை அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.