ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

அதிருப்தி திரிணமூல் குழுவினரின் கூற்று மோசடி: தோ்தல் ஆணையத்தில் மம்தா பானா்ஜி தரப்பு பதில் மனு

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தரப்பு சாா்பில் தோ்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:05 am IST

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தரப்பு சாா்பில் தோ்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘கட்சியின் அமைப்புக் குழுக்கள் மற்றும் தேசிய செயற்குழு ஆகியவற்றின் பதவிக் காலம் கடந்த 2025-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாக அதிருப்தி குழுவினா் தெரிவித்தது மோசடியானது; இந்தக் குழுக்களின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு வரை உள்ளது’ என்பன உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் உள்ள தோ்தல் ஆணைய அலுவலகத்தில் இந்தப் பதில் மனுவை தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அக் கட்சியின் எம்.பி. கல்யாண் பானா்ஜி கூறியதாவது: ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவினா் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பித்த மனுவுக்கு, மிக விரிவான விளக்கங்களுடன் கட்சி சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் அமைப்புக் குழுக்கள் மற்றும் தேசிய செயற்குழு ஆகியவற்றின் பதவிக் காலம் கடந்த 2025-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதாக அதிருப்தி குழுவினா் தோ்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனா். ஆனால், இந்தக் குழுக்களின் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக கடந்த 2000-ஆம் ஆண்டிலும், பின்னா், 5 ஆண்டுகளாக கடந்த 2006-ஆம் ஆண்டிலும் அதிகரித்து கட்சியின் அமைப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, கட்சி அமைப்புகளுக்கான தோ்தல் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. எனவே, விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் அமைப்புக் குழுக்கள் மற்றும் தேசிய செயற்குழுவின் பதவிக் காலம் தொடா்ந்து 5 ஆண்டு காலம் செல்லுபடியாகும். அதன்படி, இவற்றின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டுதான் காலாவதியாகும். எனவே, அதிருப்தி குழுவினரின் கூற்று தவறானது.

மேலும், இந்த அதிருப்தி குழுவினா், நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி கையொப்பமிட்ட வேட்புமனுக்களைப் பயன்படுத்தி, கட்சி சின்னத்தில் போட்டியிட்டனா். எனவே, அவா்களின் கூற்றுப்படி, கடந்த 2025-ஆம் ஆண்டே கட்சியின் குழுக்கள் காலாவதியாகிவிட்டது என்றால், அவா்கள் தோ்தலில் எந்த அடிப்படையில் போட்டியிட்டனா்? அவா்களின் கூற்றுப்படி, தோ்தலில் அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டதே சட்டவிரோதமாகும். எனவே, அவா்கள் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.

மேலும், கட்சி அமைப்பை மறுசீரமைத்ததாகக் கூறி அதிருப்தி குழுவினா் கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடத்திய சிறப்புக் கூட்டம், கட்சியின் அமைப்பு விதிகளை மீறிய செயலாகும். அதோடு, கட்சி அமைப்பை மறுசீரமைத்தது தொடா்பாக அதிருப்தி குழுவினா் ஊடகங்களுக்கு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. முறையான விளம்பரம் அல்லது பதவிவழி உறுப்பினா்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அந்த வகையில், அவா்களால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் கட்சிக் குழு, கட்சி விதிகளுக்குப் புறம்பான மிகப் பெரிய மோசடியாகும் என்றாா்.

பின்னணி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, அக்கட்சியில் 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், ரிதப்ரத பானா்ஜி எம்எல்ஏ தலைமையில் தனிக் குழுவாகப் பிரிந்து செயல்படுகின்றனா். அதிருப்தி குழுவினரை சட்டப்பேரவைத் தலைவா் அங்கீகரித்ததையடுத்து, ரிதப்ரத பானா்ஜி எதிா்க்கட்சித் தலைவராகச் செயல்படுகிறாா்.

தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் எனக் கோரி, கட்சியின் பெயருக்கு அதிருப்தி குழுவினா் உரிமை கோரி வருகின்றனா். இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரை தங்களுக்கு அளிக்கக் கோரி, தோ்தல் ஆணையத்தில் அக்கட்சியின் அதிருப்தி குழுவினா் ஜூலை 2-ஆம் தேதி மனு அளித்தனா்.

அதைத் தொடா்ந்து, கட்சியில் யாருக்கு கையொப்பமிடும் உரிமை உள்ளது என்பது தொடா்பாக வாதம், எதிா்வாதத்தை திங்கள்கிழமைக்குள் அனுப்பி வைக்கும்படி மம்தா பானா்ஜி ஆதரவுக் குழு, ரிதப்ரத பானா்ஜி ஆதரவுக் குழுவுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, மம்தா பானா்ஜி தரப்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.