FOLLOW US

ON GOOGLE DISCOVER

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஏர்டெல் கொடுத்த அதிர்ச்சி ரூ.299 பிளான் இனி இல்லை! அது மட்டுமா?

மாதாந்திர திட்டமான ரூ.299 கட்டண பிளானை நீக்கி ஏர்டெல் அதிர்ச்சி நடவடிக்கை பற்றி...

News image

ஏர்டெல்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 5:58 pm IST

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.299 பிளானை ஏர்டெல் நிறுவனம் நீக்கியிருக்கிறது. இது டேட்டா அதிகம் கொடுக்கும் ரூ.349 பிளான் மூலம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், திடீரென அதன் மாதந்திர திட்டங்களை அதுவும் அதிகமானோர் பயன்படுத்தும் குறைந்தபட்ச மாதந்திர திட்டத்தினை மாற்றியமைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

பாரதி ஏர்டெல் நிறுவனம், நாடு முழுவதும் ரூ. 299, ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய நான்கு ப்ரீபெய்ட் (prepaid) திட்டங்களை நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அதிகமானோர் பயன்படுத்தி வந்த ரூ. 299-க்கு இருந்த திட்டம் ரூ. 349-க்கான திட்டமாக மாற்றப்பட்டுள்ளதுதான்.

அதாவது, 299 கட்டணத்தில் இருந்த பிளான், விலை கிட்டத்தட்ட 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 28 நாள்கள் செல்லுபடியாகும் 299 பிளானில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா கிடைத்து வந்தது. ஆனால், ரூ.349 திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை உயர்த்தி, கட்டண கட்டமைப்பை சீர்படுத்தும் வகையில் ஏர்டெல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Airtel's shocker: The Rs. 299 plan is no more! And that's not all.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.