மாநிலங்களவையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் குறித்து அவமரியாதையான கருத்து தெரிவிக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (ஆக. 10) மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை ”லுங்கி வாலா” எனக் குறிப்பிட்டு பாஜக உறுப்பினர் சுஷ்மிதா தேவ் அவமரியாதையான கருத்தைத் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியர்களின் கலாசாரத்தை அவமதிக்கும் விதத்தில் சுஷ்மிதா தேவ் கருத்து தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸை ஜான் பிரிட்டாஸ் இன்று தாக்கல் செய்துள்ளார்.
இதுபற்றி, மாநிலங்களவையில் அவர் கூறுகையில்,
“வார்த்தை மோதல் பரவாயில்லை, நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். ஆனால் அவர் என்னை மீண்டும் மீண்டும் 'லுங்கி வாலா' என அழைப்பது ஏற்புடையதல்ல” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் முன்னர் சுஷ்மிதா தேவ்வின் கருத்தையும் கேட்க வேண்டுமென ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
Proceedings in the Rajya Sabha have been adjourned after opposition parties created an uproar to condemn the disrespectful remarks made about CPI(M) member John Brittas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!

வந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!
வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!

மூன்றே மாதங்களில்..! திரிணமூல் மாநிலங்களவை எம்பி பதவியை ராஜிநாமா செய்தார் நடிகை கோயல் மல்லிக்!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK




