/

மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் வரிப் பணம் ரூ. 175 கோடி வீணடிப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்கள் பணம் ரூ. 175 கோடி வீணடிக்கப்பட்டது குறித்து...

News image

நாடாளுமன்றம் - கோப்புப் படம்

Updated On :13 வினாடிகள் முன்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்கள் பணம் ரூ. 175 கோடி வீணடிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நீட் வினாத்தாள் கசிவு, மத்திய கல்வித் துறை அமைச்சா் ராஜிநாமா, தில்லியில் மாணவா்கள் போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதல், ராமா் கோயில் நன்கொடை முறைகேடு எனப் பல்வேறு விவகாரங்களை எழுப்பி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 7,000 நிமிடங்களுக்குமேல் அவைகள் முடங்கின.

மக்களின் வரிப் பணத்திலேயே நாடாளுமன்றம் இயங்குகிறது. அப்படியிருக்கையில், அவைகள் முடங்குவதால் மக்களின் வரிப் பணம்தான் வீணடிக்கப்படுகிறது.

ஜூலை 20-ல் தொடங்கி, நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற்றன. ஆனால், கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பல்வேறு விவகாரங்களால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, ஒருநாளில்கூட நாடாளுமன்றம் முழுமையாக நடைபெறவில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.5 லட்சம் செலவாகும். இதன்படி, ஒரு மணிநேரத்துக்கு ரூ. 1.5 கோடி செலவாகிறது. அப்படியெனில், 6 மணிநேரம் கொண்ட ஒருநாள் அமர்வுக்கு ரூ. 9 கோடி செலவிடப்படும்.

ஆனால், தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 7,000 நிமிடங்களுக்கும் (116 மணி 40 நிமிடங்கள்) மேலாக முடங்கின. இதனால், ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.5 லட்சம் வீதம் 7,000 நிமிடங்களுக்கு ரூ. 175 கோடி செலவாகிறது. இதன்மூலம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் வரிப் பணமான ரூ. 175 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

Summary

Rs. 175 crore of public tax money wasted during the Monsoon Session

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.