தில்லி மெட்ரோ ரயிலில் இளம் பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரை பொதுமக்கள் அடித்து வெளியேற்றினர்.
பாதுகாப்புப் படை வீரர் தன்னை புகைப்படம் எடுத்ததாக அப்பெண் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ரயிலில் இருந்த மக்கள் அவரின் ஸ்மார்ட்போனை ஆய்வு செய்தனர். அதில் அப்பெண்ணின் படங்கள் இருந்ததால் மக்கள் அவரை ரயிலில் இருந்து அடித்து வெளியேற்றினர்.
தில்லி எய்ம்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்புப் படை வீரரின் ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டும் என இளம்பெண் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவரின் ஸ்மார்ட்போனை பரிசோதனை செய்தனர்.
அப்போது பெண்ணின் புகைப்படத்தை வீரர் உடனே நீக்குவதற்கு முற்பட்டபோது, மக்கள் அவரைப் பிடித்து அவரிடமிருந்து ஸ்மார்ட்போனை பறித்தனர்.
அப்போது ரயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை ரயிலில் இருந்த ஒரு பயணி விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ரயிலில் பயணித்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த வீரருக்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Summary
CISF personnel accused of clicking woman's pictures in Delhi Metro
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








