ரயில் முன்பதிவு இருக்கை தகராறு காரணமாக ரயில்வே பாதுகாப்புப் படை காவலரை நடிகை அந்தாரா பானர்ஜி தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பிறகு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியில் ஒளிபரப்பான கசௌட்டி ஜிந்தகி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அந்தாரா பானர்ஜி. இவர் இணையத் தொடரில் நடித்துவரும் நிலையில், அதற்கான படப்பிடிப்பிற்காக ரயிலில் சூரத் சென்றுள்ளார்.
பாந்த்ரா - கங்காநகர் செல்லும் ஆரவல்லி விரைவு ரயிலில் பயணித்தபோது, வேறு ஒருவர் முன்பதிவு செய்த இருக்கையில் அந்தாரா அமர்ந்துள்ளார். இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகர் அவரிடம் பேசி வேறு இருக்கைக்கு மாறும்படி கேட்டதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவியை டிக்கெட் பரிசோதகர் நாடியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தவந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலரையும் அந்தாரா கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை உதவி துணை ஆணையாளர் யாமினிகாந்த் மிஸ்ரா பேசுகையில், நடிகை அந்தாரா பையில் ஒரு பிளேட் வைத்திருந்ததாகவும் அதனைக் கொண்டு தன்னை தாக்கிக்கொண்டு பின்னர், காவலரை நோக்கித் தாக்கியுள்ளார். இதில் இரண்டு வெட்டுக் காயங்களுடன் காவலர் படுகாயம் அடைந்துள்ளார்.
பின்னர் அவரின் சீருடையை பிடித்துத் தள்ளியுள்ளார். அவரின் கைபேசியை சேதப்படுத்தி, கண்ணாடியையும் உடைத்துள்ளார். பின்னர் தஹானு ரயில்நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு போரிவாலாய் நகர ரயில்வே காவல் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், அரசு ஊழியர்களுக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், தாக்குதல் மற்றும் வேண்டுமென்றே அவமதித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Summary
Kasautii Zindagii Kay Actor Antara Banerjee Attacks RPF Jawan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








