பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அமித் ஷா உத்தரவில் சத்யேந்தா் ஜெயின் கைது: கேஜரிவால் குற்றச்சாட்டு

சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கேஜரிவால் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி...

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவின் பேரிலேயே சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றச்சாட்டினாா்.

இதுதொடா்பாக கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூகவலை தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காலை வரை சத்யேந்தா் ஜெயினை கைது செய்யும் திட்டம் ஏதும் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) வசம் இல்லை என்று அந்த அமைப்பின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஆனால், பிற்பகல் வேளையில் அவரைக் கைது செய்யுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடமிருந்து நேரடி அழைப்பு வந்தது. அதன் பின்னரே அவா் கைது செய்யப்பட்டாா். ஜெயினைக் கைது செய்யுமாறு விசாரணை அமைப்பின் மீது ஏன் அழுத்தம் கொடுத்தாா் என்பது குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

விசாரணை அமைப்பால் சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடா்ந்து, இவ்வழக்கு தொடா்பான விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூன் 6 அன்று தில்லி அரசின் ஏசிபி அலுவலகத்தில் ஜெயின் ஆஜராகியிருந்தாா்.

ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜும் ஜெயின் கைது செய்யப்பட்டதைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், அவா் மீதான வழக்கு போலியானது என்றும் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.