ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டி.கே. சிவகுமார் மரியாதை செலுத்தியது பற்றி...

D.K. Shivakumar at the Rajiv Gandhi Memorial.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டி.கே. சிவகுமார். - படம் - எக்ஸ்

Published On :20 ஆகஸ்ட் 2026, 8:01 pm IST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஆக. 20) மரியாதை செலுத்தினார்.

சென்னை அருகே உள்ள கோவளத்தில் இன்று (ஆக. 20) நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட தென்மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்த டி.கே. சிவகுமார், கூட்டம் முடிந்த பிறகு, ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்துக்குச்சென்று மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து டி.கே. சிவகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அங்கு இருந்தது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. எனது அரசியல் பயணத்தின் தொடக்க காலங்களில் அவர் என்மீது காட்டிய நம்பிக்கையையும் அன்பையும் அது மீண்டும் நினைவூட்டியது. இளம் தலைவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை, எங்களில் பலருக்கு, மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்வதற்கான தைரியத்தை அளித்தது.

இந்த நினைவிடம் எனக்கும் கர்நாடக மக்களுக்கும் சிறப்பான தொடர்பைக் கொண்டுள்ளது. கர்நாடகத்தின் கனகபுராவிலிருந்து கொண்டுவரப்பட்ட கல்லில் பதித்த ராஜீவ் காந்தியின் உருவப்படமானது அவருக்கும் கர்நாடக மக்களுக்கும் உள்ள பிணைப்பை விளக்கும் சின்னமாக விளங்குகிறது.

இதை சாத்தியமாக்க அப்போதைய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த ஆதரவை, நன்றியோடு நினைவு கூர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Karnataka Chief Minister D.K. Shivakumar paid tribute at the memorial of the late former Prime Minister Rajiv Gandhi today (August 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.