தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 429 திருமணங்கள்: பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு

கேரளத்தின் குருவாயூர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையில் 426 திருமணங்கள் நடைபெறுவது குறித்து...

Guruvayur

குருவாயூர் கோயில் - கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 9:39 am IST

கேரளத்தில் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாள்களில் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் ஆவணி மாத முகூர்த்த நாள்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். இந்த நாள்களில் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில், ஆவணி மாத முகூர்த்த நாளான வருகிற ஞாயிற்றுக்கிழமையில் (ஆக. 23) குருவாயூர் கோயிலில் 426 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. மேலும், இதுவரையில் ஆக. 30-ல் 342 ஜோடிகளுக்கும், செப். 13-ல் 328 ஜோடிகளுக்கும் திருமணம் நடத்த முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் கோயிலில் திருமணங்களை தடை ஏதுமின்றி நடத்தவும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், போதிய வசதிகள் குறித்தும் கோயிலின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த 3 நாள்களிலும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, திருமண நிகழ்ச்சிகளும் 4 மணிமுதலே நடைபெறும். திருமணங்கள் நடத்த ஏதுவாக 6 மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மணமக்களுடன், புகைப்படக்காரர்கள் உள்பட 24 பேர் மட்டுமே மண்டபத்திற்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமின்றி, கோயிலில் கூட்டம் அதிகமிருக்கும் காரணத்தால், கோயிலுக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதி கிடையாது. கோயிலின் கிழக்கு நுழைவாயில் முழுவதுமாக ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, பக்தர்கள் ஒரே திசையில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

Summary

429 weddings in a single day at Guruvayur Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.