
குஜராத்: வாகனத்தின் டீசல் டேங் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
குஜராத்தில் வாகனத்தின் டீசல் டேங் வெடித்து 4 பேர் பலியானது பற்றி..

கோப்புப்படம்.
குஜராத்தில் வாகனத்தின் டீசல் டேங் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள பழைய இரும்பு கிடங்கில் சனிக்கிழமை வணிக வாகனத்தின் டீசல் டேங்க் வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகலில் நக்கத்ரானா பகுதியில் நடந்துள்ளது.
பலியானவர்கள் முகமது இலியாஸ் (30), நூர் முகமது இலியாஸ் (26), ஹுசைன் முகமது (3.5) மற்றும் நூர் பாத்திமா (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முகமது இலியாஸும் நூர் முகமது இலியாஸும் வாகனத்தில் இருந்து பழைய இரும்புப் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த வெடிப்பின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்ததால், அப்போது வாகனத்தின் அருகே இருந்த இரு சிறுவர்களும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடி விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Summary
Four persons, including two children from a family, were killed after the fuel tank of a commercial vehicle exploded at a scrap yard in Gujarat's Kutch district on Saturday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






