மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

உ.பி.: தில்லி செல்லும் ரயிலில் பயணித்த வங்கதேச நபர் கைது!

மிர்சாபூர் ரயில் நிலையத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி....

Bangladeshi national arrested

வங்கதேசத்தவர் உ.பி.யில் கைது - file photo

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:25 pm IST

உ.பி.யின் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாமின் காமாக்யா - தில்லி இடையே செல்லும் விரைவு ரயிலில் பயணித்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர் மிர்சாபூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். விசாரணையில் அந்த நபர், காஷ்மீருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததும், பிரம்மபுத்ரா விரைவு ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் பயணச்சீட்டு இல்லாமல் தில்லிக்குச் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

சனிக்கிழமை இரவு ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களால் கைதுசெய்யப்பட்ட அவர், வங்கதேசத்தின் ஹபிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் விசாரணையின்போது அவரிடம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, விசா அல்லது இந்தியாவுக்குள் நுழைவதற்கான வேறு எந்த ஆவணமும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அந்த நபர் மிர்சாபூர் அரசு ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே காவல்துறை அதிகாரி ராஜேஷ் குமார் வர்மா தெரிவித்தார். அவர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறார், அதன்பிறகு சிறையில் அடைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

இதையடுத்து கைதான நபர் குறித்து, பயங்கரவாத எதிர்ப்புப் படை, உளவுத்துறைப் பிரிவு மற்றும் உள்ளூர் உளவுப் பிரிவு ஆகியவற்றிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்மா மேலும் தெரிவித்தார்.

Summary

A Bangladesh national travelling aboard an express train connecting Kamakhya in Assam and Delhi was arrested at Mirzapur railway station, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.