ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 200 பேர் கொண்ட வர்த்தகக் குழு நாளை ஜப்பான் பயணம்!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 200 பேர் கொண்ட வர்த்தகக் குழு நாளை ஜப்பான் பயணம் செல்வது குறித்து...

Union Minister Piyush Goyal to embark on 4-day visit to Japan

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் - ஏஐஆர்

Published On :

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆகஸ்ட் 24 முதல் 27 வரை நான்கு நாள் பயணமாக ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

உற்பத்தி, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழு அவருடன் ஜப்பான் செல்கிறது.

பியூஷ் கோயல், டோக்கியோவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாகப் பங்களித்து வரும் முக்கிய ஜப்பானியப் பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அத்துடன், 1,500-க்கும் மேற்பட்ட முன்னணி ஜப்பானிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பான கெய்டன்ரென்(ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பு) சார்பில் நடத்தப்படும் வட்டமேசை மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார்.

மேலும், ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பியூஷ் கோயல், ஜப்பானிய அரசு, நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களையும் சந்திக்கிறார். மேலும், ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.

மத்திய ஜப்பானின் தொழில் மையமான நகோயாவில், மத்திய ஜப்பான் பொருளாதாரக் கூட்டமைப்பு, நகோயா வர்த்தக மற்றும் தொழில்துறை சபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாலை வலத்தில் பங்கேற்பதுடன், ஐச்சி மாகாணத் தலைவர்கள் மற்றும் வாகன மற்றும் எஃகுத் துறைகளில் உள்ளமுக்கிய முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

ஒசாகாவில் ஜப்பானிய நிறுவன பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுடன், முதலீட்டாளர்கள், வணிகர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் திரு பியூஷ் கோயல் பங்கேற்பார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட முன்னெப்போதும் இல்லாத வணிகக் குழுவின் ஆதரவுடன் பியூஷ் கோயலின் இந்த பயணம், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்குப் புதிய உத்வேகம் அளிப்பதாகவும், இரு நாடுகளும் தங்களின் சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைக்கு கொண்டுவரும் லட்சியத்தை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2047-ஆம் ஆண்டில் இந்தியா அடைய விரும்பும் தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சிமிக்க இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு மைய துறைகளான உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் அடுத்த தலைமுறைத் தொழில்களுக்கு இந்தப் பயணம் புதிய ஒத்துழைப்பு வழிகளையும் திறக்கும் என்றும் நம்பப்படுகிறது.

Summary

Commerce and Industry Minister Piyush Goyal will be on a four-day visit to Japan from tomorrow till the 27th of this month travelling to Tokyo, Nagoya and Osaka, leading India’s largest-ever business delegation to Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.