கொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7%-க்கும் அதிகமாக இருக்கும்: நிர்மலா சீதாராமன்

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகத் தொடரும் என நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது குறித்து...

India likely to sustain 7% economic growth in FY 2026-27

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - எக்ஸ்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:40 pm IST

சிகாகோ: உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகத் தொடரும் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக சிகாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உக்ரைன்-ரஷியா மற்றும் அமெரிக்கா-ஈரான் மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான எரிபொருள், உரம் விநியோகத் தடை ஆகியவற்றால் ஏற்பட்ட புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும், இந்தியா தனது வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

மேற்கு ஆசிய மோதலால் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட இடையூறுகள், ஆரம்பத்தில் கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் உரங்கள் போன்ற முக்கியப் பொருள்களின் விநியோகத்தைப் பாதித்தாலும், மாற்று வழிகள் மூலம் விநியோகத்தை உறுதிசெய்ய இந்தியா வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் விலைகள் கடுமையாக உயர்ந்த போதிலும், மானியங்கள் மூலம் விவசாயிகளுக்கான உர விலையை அரசு மாற்றமின்றி வைத்திருப்பதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதாரம் விரிவடைந்து வருவதால், அரசு தனது கட்டமைப்புச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், குறிப்பாக பல்வேறு நாடுகளுடன் நேரடி இருதரப்பு வணிகம் மற்றும் அதிக முதலீடுகளை ஈர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. 2030-க்குள் இந்தியாவின் கடன் அளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்குக் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

Summary

Finance Minister Nirmala Sitharaman said that India is likely to sustain an economic growth rate of 7 per cent or more in the financial year 2026-27.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.