புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ரூ.1.27 லட்சம் கோடி ‘செமிகான் 2.0’ திட்டம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

நாட்டில் செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் ரூ.1.27,500 கோடி ஒதுக்கீட்டிலான இரண்டாம் கட்ட (செமிகான் 2.0) திட்டத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

Published On :

நாட்டில் செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் ரூ.1.27,500 கோடி ஒதுக்கீட்டிலான இரண்டாம் கட்ட (செமிகான் 2.0) திட்டத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

இந்தத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களுக்கான தகுதி நடைமுறைகள், சிப் உற்பத்திக்கான வழிகாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவை இந்த அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக மேம்பட்ட சிப்புகள் மற்றும் சேமிப்பகங்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ள சூழலில், அதற்கு முக்கிய வளமான செமிகண்டக்டா் உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி, சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டா் உபகரணங்கள்-மூலப்பொருள்கள், உற்பத்தி வசதிகள், மேம்பட்ட பேக்கேஜிங்-பரிசோதனை, ஆராய்ச்சி-மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய 6 அம்சங்களை உள்ளடக்கிய இந்த ‘செமிகான் 2.0’ திட்டத்துக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தற்போது இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் எஸ். கிருஷ்ணன் கூறுகையில், ‘செமிகண்டக்டா் உற்பத்தியில் நாடு அடுத்த நிலைக்குச் செல்வதை ‘செமிகான் 2.0’ திட்டம் உறுதிப்படுத்தும். தற்சாா்பு மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய தொழில் துறையை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்’ என்றாா்.

இந்த அறிவிக்கையின்படி, ‘செமிகான் 2.0’ திட்டத்தில் சோ்ந்து வா்த்தகத் துறைக்கான சிப்புகளைத் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள் புத்தாக்க நிறுவனங்களாக (ஸ்டாா்ட்அப்), இந்தியா் அல்லது வெளிநாடுவாழ் இந்தியருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். இந்தப் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் பங்கு மூலதன கூட்டு முதலீடு வடிவில் நிதி உதவி வழங்கப்படும். நிறுவனங்களுக்கு காப்புரிமை (ராயல்டி) நிதியளிப்பு மற்றும் பங்கு மூலதன கூட்டு முதலீடு அடிப்படையில் நிதியுதவி அளிக்கப்படும்.

இதில், கூடுதல் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு, சிலிக்கான் உற்பத்தியகங்களுக்கு 40 சதவீத அளவுக்கும், எல்சிடி, ஓஎல்இடி, மைக்ரோ எல்இடி போன்ற காம்பவுண்ட் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தியகங்களுக்கு 35 சதவீத அளவுக்கும் நிதியுதவி அளிக்கப்படும்.

பேக்கேஜிங், பரிசோதனை, அஸெம்ப்ளிங் நடைமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், மேம்பட்ட பேக்கேஜிங் மூலதனச் செலவில் 35 சதவீதமும், பாரம்பரிய பேக்கேஜிங்குக்கு 25 சதவீதமும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் 12 செமிகண்டக்டா் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அவற்றில் மைக்ரான் நிறுவனத்தின் ஏடிஎம்பி ஆலை, கெய்ன்ஸ் செமிகான் மற்றும் சிஜி செமி ஓஎஸ்ஏடி ஆலைகளில் வணிக சிப் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.