

பாலக்காட்டில் சாலையோரம் கிடந்த பொருள் வெடித்ததில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.
கேரள மாநிலம், வடக்கு மாவட்டத்தில் சாலையோரத்தில் கிடந்த பொருள் வெடித்ததில் 11 வயது சிறுவனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர். காயமடைந்த சிறுவன் வீட்டம்பாராவைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷன் என அடையாளம் காணப்பட்டான்.
உடனே சிறுவன் பெரிந்தல்மன்னாவில் உள்ள மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டான். வெடிவிபத்தில் கணுக்காலில் சதை கிழிந்ததால் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸார் கூறுகையில், ஸ்ரீஹர்ஷன் தனது தாயுடன் கிராமப் பகுதியில் நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. சிறுவனின் கால் பொருளில் பட்டதும் திடீரென்று அது வெடித்தது.
இது காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் அடிக்கடி செல்லும் பகுதி என்பதால், மக்கள் அங்கு இதுபோன்ற வெடிபொருட்களை வைக்க வாய்ப்புகள் உள்ளன.
அறிவியல் பரிசோதனை மூலம் மட்டுமே இதை உறுதிப்படுத்த முடியும். நாங்கள் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த சிறுவன் தற்போது பெரிந்தல்மன்னாவில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மேலும் சிறுவனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.