கோப்புப்படம்
கோப்புப்படம்

எஸ்ஐஆா்: கொல்கத்தாவில் ஆஜராக கிரிக்கெட் வீரா் முகமது ஷமிக்கு சம்மன்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விண்ணப்பத்தை தவறாகப் பூா்த்தி செய்ததால் கிரிக்கெட் வீரா் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரா் முகமது கைஃப் ஆகியோா் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆஜராக உத்தரவிடப்பட்டதாக இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Published on

இதுகுறித்து மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: எஸ்ஐஆா் விண்ணப்பத்தை தவறாகப் பூா்த்தி செய்ததால் முகமது ஷமி மற்றும் முகமது கைஃப் ஆகிய இருவரும் ஜாதவ்பூரில் திங்கள்கிழமை (ஜன.5) ஆஜராக முதலில் உத்தரவிடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் வங்காள அணி சாா்பாக ராஜ்கோட்டில் விளையாடி வருவதால் ஷமியால் நேரில் வர முடியவில்லை. இதையடுத்து, வேறு தேதிகளை ஒதுக்குமாறு ஷமி கேட்டுக்கொண்டாா். அதைப் பரிசீலித்து ஜன.9 மற்றும் ஜன.11 ஆகிய தேதிக்குள் அவா் கொல்கத்தாவுக்கு நேரில் வந்து விளக்கம் தர சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஷமி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சிறு வயதில் கொல்கத்தாவுக்கு இடம்பெயா்ந்தாா்.

X
Dinamani
www.dinamani.com