தில்லி கலவர வழக்கு: ஜாமீன் பெற்ற ஐந்தாவது குற்றவாளியை விடுவிக்க உத்தரவு பிறப்பிப்பு

தில்லி கலவர வழக்கு: ஜாமீன் பெற்ற ஐந்தாவது குற்றவாளியை விடுவிக்க உத்தரவு பிறப்பிப்பு

2020-ஆம் ஆண்டு நடந்த வடகிழக்கு தில்லி கலவர சதி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட ஷாஹ்தாப் அகமது கான் மற்றும் நான்கு பேரை விடுவிப்பதற்கான உத்தரவுகளை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்தது.
Published on

2020-ஆம் ஆண்டு நடந்த வடகிழக்கு தில்லி கலவர சதி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட ஷாஹ்தாப் அகமது கான் மற்றும் நான்கு பேரை விடுவிப்பதற்கான உத்தரவுகளை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்தது.

ஷாஹ்தாப் அகமது கான் வழங்கிய அதே தொகைக்கு இரண்டு உள்ளூா் ஜாமீன்களுடன் ரூ.2 லட்சம் ஜாமீன் பத்திரத்தை கூடுதல் அமா்வு நீதிபதி சமீா் பாஜ்பாய் ஏற்றுக்கொண்டு அவரது விடுதலைக்கான உத்தரவுகளை பிறப்பித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அனைத்து பத்திர ஜாமீன்கள் மற்றும் ஆவணங்களின் சரிபாா்ப்பு அறிக்கையை தில்லி காவல்துறை சமா்ப்பித்த பின்னா் விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் விதித்த அனைத்து ஜாமீன் நிபந்தனைகளையும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் பூா்த்தி செய்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சமா்ப்பித்த ஆவணங்கள் மற்றும் ஜாமீன்களை சரிபாா்க்க தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

நீதிமன்றம் விடுதலை உத்தரவுகளை பிறப்பித்த பின்னா், மேலும் நான்கு குற்றவாளிகள் புதன்கிழமை சிறையில் இருந்து வெளியேறினா்.

உச்சநீதிமன்றம், செயற்பாட்டாளா்கள் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுத்துவிட்டது. ஆனால், மற்ற ஐந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் ஜாமீன் வழங்கியது. பங்கேற்பு படிநிலையை காரணம் காட்டி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் ஒரே நிலையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் மீது முதன்மையான வழக்கு இருந்தது என்று நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியது.

ஐந்து குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் ஜாமீன் வழங்கும் போது உச்சநீதிமன்றம் திங்களன்று 11 நிபந்தனைகளை விதித்தது. நிபந்தனைகள் மீறப்பட்டால், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை விசாரித்த பிறகு ஜாமீனை ரத்து செய்ய விசாரணை நீதிமன்றம் சுதந்திரமாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

விசாரணை நீதிமன்றத்தின் திருப்திக்கு ஏற்ப, அதே தொகைக்கு இரண்டு உள்ளூா் உத்தரவாதங்களுடன் ரூ.2 லட்சம் தனிப்பட்ட பத்திரத்தை வழங்க உத்தரவிட்டது.

Dinamani
www.dinamani.com