

இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை :
ஈரானுடன் வணிக ரீதியிலான தொடர்பு கொண்டுள்ள நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டால் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தைக் கோரும் மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்து 2-ஆவது வாரத்தை எட்டியுள்ளது.
இந்தச் சூழலில், போராட்டக்காரா்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா். ஈரானின் தற்போதைய பிரச்னைக்கு ராணுவரீதியில் தலையிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிரம்ப் கூறினாா். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஈரானுடன் வர்த்தக உறவு பூண்டுள்ள நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பிலிருந்து இன்று(ஜன. 13) தெரிவிக்கப்பட்டுளதாவது:
அமெரிக்காவின் மேற்கண்ட அறிவிப்பால் இந்தியாவுக்கு குறைந்தளவிலான தாக்கமே ஏற்படும். இந்தியாவைப் பொறுத்தவரையில், சர்வதேச அளவில் நாம் வர்த்த உறவு பூண்டுள்ள நாடுகளில் முதல் 50 இடங்களில்கூட ஈரான் இல்லை.
கடந்த ஆண்டு, ஈரானுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் 1.6 பில்லியன் டாலர் என்ற அளவில், இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் வெறும் சுமார் 0.15 சத்வீதம் மட்டுமே. ஈரானுடனான இந்தியாவின் வர்த்தக மதிப்பு வெளிப்புற காரணங்களால் மேலும் சரிவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.