தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 687.19 பில்லியன் டாலராக உயா்வு!

ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 687.19 பில்லியன் டாலராக உயர்வு

News image
அந்நியச் செலாவணி கையிருப்பு- பிரதிப் படம்
Updated On :16 ஜனவரி 2026, 12:43 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 687.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 392 மில்லியன் டாலர் அதிகரித்து, 687.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய அறிக்கை வாரத்தில், 9.809 பில்லியன் டாலர் குறைந்து, 686.80 பில்லியன் டாலராக இருந்தது.

உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பைப் பாதுகாக்க ரிசா்வ் வங்கி அந்நிய செலாவணியைப் பயன்படுத்துவதால், கையிருப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

இந்த வாரத்தில், இந்தியாவின் தங்க கையிருப்பு மதிப்பு 1.568 பில்லியன் டாலர் உயர்ந்து, 112.83 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 39 மில்லியன் டாலர் குறைந்து, 18.739 பில்லியன் டாலராக உள்ளது.

சா்வதேச நாணய நிதியத்தில் (ஐஎம்எஃப்), இந்தியாவின் கையிருப்பு 13 மில்லியன் டாலர் குறைந்து, 4.758 பில்லியன் டாலராக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.