அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: வர்த்தகச் செயலாளர்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: வர்த்தகச் செயலாளர்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா நெருக்கமாக உள்ளது: வர்த்தகச் செயலாளர்
Published on

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா நெருக்கமாக உள்ளதாக வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் பேசுகையில், "பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிலுவையில் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தைக் குழுக்கள் பேசி வருகின்றன. இருப்பினும், அதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது.

ஆனால், பேச்சுவார்த்தை நெருக்கமாகத்தான் உள்ளது. இரு தரப்பினரும் தயாராகும்வரை பேச்சுவார்த்தை இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் குறித்தும் பேசிய ராஜேஷ் அகர்வால், "அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, இன்னும் ஒரு நேர்மறையான போக்கைத்தான் தக்கவைத்துள்ளது. அதிக வரி இருந்தபோதிலும், சுமார் 7 பில்லியன் டாலர் வர்த்தகம் இருந்து வருகிறது. அதே சமயத்தில் குறைவான வரி உள்ள பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கடுமையான வரியால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி குறையும் என்ற அச்சம் இருந்தது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில், எரிசக்தி வர்த்தகம் ஒரு சிக்கலான பிரச்னையாக இருந்து வருகிறது" என்று கூறினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: வர்த்தகச் செயலாளர்
ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம்!
Summary

India And US Very Close To Signing Trade Deal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com