கேமராக்களுக்கு பாதுகாப்பு; ஏழைகளுக்கு இல்லை: பாஜக மீது திரிணமூல் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பிரதமரின் வருகைக்காக குடிமக்கள் துன்புறுத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தாக்கும் காட்சி
ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தாக்கும் காட்சி
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் பிரதமரின் வருகைக்காக குடிமக்கள் துன்புறுத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 17) தொடக்கி வைத்தார்.

முன்னதாக, ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்கும் ரயில் நிலையத்தில் மத்திய காவற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த ஒருவரை காவல்துறையினர் தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பிரதமர் வருகைக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த விடியோவை பகிர்ந்த மாநில அரசான திரிணமூல் காங்கிரஸ், "பிரதமரிடம் ஒன்று கேட்க வேண்டும். இப்படித்தான் ஏழைகளை பிரதமர் வரவேற்பாரா?

பொதுமக்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் மத்திய படைகளை பாஜக அரசு பயன்படுத்துகிறது. அவர்கள் எடுக்கும் புகைப்படம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு செய்கின்றனர். இதுதான் பிரதமர் மோடியின் உண்மையான ஆட்சி.

மோடியின் இந்தியாவில், மேடையில் கதைகள் கூறப்படுகின்றன; கேமராக்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், ஏழைகள் குடிமக்களாக கருதப்படாமல், தடைகளாகக் கருதப்படுகின்றனர். கேமராக்கள் பாதுகாக்கப்படுகின்றன; ஆனால், மக்கள் பாதுகாக்கப்படுவதில்லை" என்று குற்றம் சாட்டினர்.

இதனிடையே, ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "மேற்கு வங்கத்தில் மாற்றம் வேண்டுமென்றால், பாஜக அரசு வரவேண்டும். மனசாட்சியற்ற, கொடூரமான திரிணமூல் காங்கிரஸ், நிதியைக் கொள்ளையடித்து, மக்களுக்குச் செல்லும் மத்திய அரசின் உதவியைத் தடுக்கிறது.

மனசாட்சியற்ற, கொடூரமான திரிணமூல் காங்கிரஸ், நிதியைக் கொள்ளையடித்து, மக்களுக்குச் செல்லும் மத்திய அரசின் உதவியைத் தடுக்கிறது" என்று தெரிவித்தார்.

ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தாக்கும் காட்சி
பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
Summary

Cameras are protected. People are not: TMC slams BJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com