ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் எல்என்ஜி கொள்முதல் செய்ய ஒப்பந்தம்..!

திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது பற்றி...
ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் எல்என்ஜி கொள்முதல் செய்ய ஒப்பந்தம்..!
PTI
Updated on
1 min read

புது தில்லி: ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, திங்கள்கிழமை(ஜன. 19) மாலை இந்தியாவுக்கு வருகை தந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயனை பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். அத்ன்பின்னர், தில்லியில் இரு தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு அமீரக அதிபரின் சுமார் 2 மணி நேர இந்தப் பயணத்தில், 2032க்குள் இருநாட்டு வர்த்தகத்தை 200 கோடி டாலர் என்னும் உயர் அளவாக இலக்கு நிர்ணயிக்கவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.

மேலும், பாதுகாப்புத்துறை, எரிசக்தி, விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் பேச்சுவர்த்தை நடத்தப்பட்டது. கத்தாருக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு அதிகளவில் எல்என்ஜி விநியோகம் செய்யும் நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் எல்என்ஜி கொள்முதல் செய்ய ஒப்பந்தம்..!
ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து ஆண்டுதோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் எல்என்ஜி கொள்முதல் செய்ய ஒப்பந்தம்..!
Summary

UAE prez, PM Modi discuss nuclear reactors, LNG deal signed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com