

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலின் நடை ஏப்ரல் 23-ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.
விஷ்ணு பகவானுக்குரிய இத்தலம், வழக்கமாக குளிர்காலத்தையொட்டி கோயிலின் நடை அடைக்கப்பட்டு, பின்னர், கோடைக் காலத்தின் தொடக்கத்தில் மீண்டும் நடை திறக்கப்படுவது வழக்கம்.
பத்ரிநாத் கோயிலின் நடையை மீண்டும் திறப்பதற்கான தேதி மற்றும் நேரம் குறிக்கும் நிகழ்ச்சி டெஹ்ரி கார்வால் மாவட்டத்திலுள்ள, நரேந்திர நகரில் உள்ள அரச குடும்ப மாளிகையில் வசந்த பஞ்சமி நாளில் குறிப்பது பாரம்பரியமாகும்.
இந்த நிலையில்,கோயிலில் நடை திறப்புக்கான தேதி, நேரம் இன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 6.15 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் என தற்போதுள்ள மகாராஜா மனுஜேந்திர ஷா அறிவித்தார்.
இதையொட்டி, கோயிலுக்கு எண்ணெய் குடம் எடுத்துச் செல்லும் யாத்திரை ஏப்ரல் 7-இல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, உலகப் புகழ்பெற்ற பதினோராவது ஜோதிர் லிங்கமான கேதார்நாத் கோயிலின் நடை அக்டோபர் 23-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கார்த்திகை சுக்ல சப்தமி அன்று குளிர்காலத்திற்காக சடங்குகள் செய்யப்பட்டு மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.