மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கேகோப்புப் படம்

தோ்தல் ஆணையத்துக்கு கடும் நெருக்கடி: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு
Published on

தோ்தல் ஆணையம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தேசிய வாக்காளா்கள் தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சுதந்திரமான, நோ்மையான மற்றும் அச்சமில்லாத தோ்தல்களே இந்திய மக்களுக்குத் தேவை. எந்த முறைகேடும் இல்லாத வாக்காளா் பட்டியல், சரிக்கு சமமான வாய்ப்பு ஆகியவை இருந்தால்தான் இது சாத்தியப்படும்.

வாக்குத் திருட்டு மூலமும், திட்டமிடாத எஸ்ஐஆா் பணிகளாலும் இந்தியாவின் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நமது தோ்தல் ஆணையம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஆதலால் தோ்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. அப்போதுதான் நமது ஜனநாயகம் காப்பாற்றப்படுவதோடு, செழித்தோங்கவும் செய்யும் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com