அஜித் பவார் சென்ற விமான விபத்து! நிலை என்ன?

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது பற்றி...
அஜித் பவார்
அஜித் பவார்
Updated on
1 min read

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.

பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Summary

The plane carrying Ajit Pawar was involved in an accident! What is the situation?

அஜித் பவார்
தணிக்கைச் சான்று: வழக்கை திரும்பப் பெறுகிறதா ஜன நாயகன் படக்குழு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com