

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்க உள்ளதாக நிதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிப்ரவரி 9-ஆம் தேதி ஆளுநர் ஆனந்திபென் படேலின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்றார்.
பிப்ரவரி 10-ஆம் தேதி, இந்தாண்டில் காலமான சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும், பிப்ரவரி 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கடைசியாக முழு பட்ஜெட் பிப்ரவரி 20, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மாநில அரசு 2025-26 நிதியாண்டிற்காக ரூ. 8,08,736 கோடி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இது முந்தைய நிதியாண்டை விட 9.8 சதவீதம் அதிகமாகும்.
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ. 7,36,437 கோடியாகத் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், டிசம்பர் 2025 அன்று, உடனடி வருவாய் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குறிப்பாக உள்கட்டமைப்பு தஐறயில் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பதற்கும் ரூ. 24,496.97 கோடி மதிப்புள்ள கூடுதல் மானியக் கோரிக்கைகளை அரசு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
The Budget Session of the Uttar Pradesh Assembly will commence on February 9, with the Budget for the financial year 2026-27 scheduled to be presented on February 11, Finance and Parliamentary Affairs Minister Suresh Kumar Khanna said on Thursday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.