

மேற்கு வங்கத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு செவிலியர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு பராசத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் செவிலியர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவர் தனது பெண் சக ஊழியருடன் இந்த மாத தொடக்கத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
பெண் செவிலியருக்கும் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு வென்டிலேட்டர் உதவி நீக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கணிசமாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
இருப்பினும் அவர் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை. இதுகுறித்து மாநில சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், இருவருக்கும் தொற்று இல்லை என்று சோதனையில் தெரிய வந்துள்ளது. ஆண் செவிலியர் வீடு திரும்பினாலும், தனிமைப்படுத்தலில் உள்ளார்.
அவரது உடல்நிலையை மதிப்பிடுவதற்கு அடுத்த சோதனை வரை அவர் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் எந்த நிபா வைரஸ் பாதிப்பும் இல்லை. இந்த இரண்டு செவிலியர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் நலமாக உள்ளனர். இருப்பினும், நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.