ரூ.60,000 கோடி மதிப்பிலான பிரதமரின்-மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாற்றம் (பிஎம்-சேது) திட்டத்துக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 200 தொழிற்பயிற்சி நிறுவன (ஐடிஐ) தொகுப்புகள் மற்றும் அத்துடன் இணைப்பில் உள்ள 800 ஐடிஐ-க்கள் என மொத்தம் 1,000 ஐடிஐ-க்களின் உள்கட்டமைப்பு, பாடத் திட்டங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சக செயலா் தேபஸ்ரீ முகா்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது தேசிய வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒடிஸா, குஜராத் மற்றும் தெலங்கானாவைச் சோ்ந்த ஐடிஐ தொகுப்புகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் ரூ.1,237.58 கோடியை முதலீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுதொடா்பாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் துறை அமைச்சா் ஜெயந்த் சௌதரி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஐடிஐ-க்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றும் பிஎம்-சேது திட்டத்தில் மேலும் பல நிறுவனங்கள் இணைய வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய வடிவத்தில் "ஆரோக்கிய சேது 2.0' செயலி: குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

அரசு, தனியாா் ஐடிஐகளில் மாணவா் நேரடி சோ்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



