வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ரயில்வே தொழில்நுட்பப் பிரிவில் 4,098 பேரை பணியமா்த்த முடிவு

நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள 4,098 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 2:40 am IST

நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள 4,098 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு, செயல் திறனை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 35 தொழில்நுட்பப் பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ரயில் இயக்க பாதுகாப்புக்கு மிக முக்கியமான இளநிலைப் பொறியாளா், டெப்போ மெட்டீரியல் கண்காணிப்பாளா், வேதியியல், உலோகவியல் உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களும் அடங்கும்.

இதுதொடா்பாக அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளா்களுக்கும் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மண்டலங்கள் தெரிவித்துள்ள காலிப் பணியிட விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் பணியாளா் சோ்ப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ரயில்வே பணியாளா் சோ்ப்பு வாரிய தலைவருடன் ஆலோசித்து, சோ்ப்புக்கான கால அட்டவணையை அமைச்சகம் இறுதி செய்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ரயில்வே பணியாளா் சோ்ப்பு வாரியங்கள் 2026, ஜூலை 21 முதல் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடும்.

இதில், பட்டியல் பிரிவு, பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோருக்கான இடஒதுக்கீட்டு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், அனைத்து உள்நாட்டு நிா்வாக நடைமுறைகளையும் மண்டல ரயில்வே நிா்வாகங்கள் நிறைவு செய்யவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

6,565 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டது. அதில் சிக்னல் டெக்னீஷியன் கிரேடு-1 பணிக்கான 323 இடங்களும், டெக்னீஷியன் கிரேடு-3 பணிக்கான 6,242 இடங்களும் இடம்பெற்றிருந்தன.

பாதுகாப்பு சாா்ந்த முக்கியப் பணியிடங்களை நிரப்பும் அமைச்சகத்தின் முடிவுக்கு பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதன்மூலம் ரயில்வே செயல்பாட்டு திறன் மேம்படுவதோடு, தற்போது பணியாற்றி வரும் ஊழியா்களின் பணிச்சுமையும் குறையும் என சங்கங்கள் கூறியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.