அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

தாஜ் மகால் உண்மையில் ஒரு கோயிலா? மத்திய அரசு, தொல்லியல் துறைக்கு நோட்டீஸ்

தாஜ் மகால் உண்மையில் ஒரு கோயிலா? என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, தொல்லியல் துறைக்கு நோட்டீஸ்

News image

தாஜ் மகால் - ஏஎன்ஐ

Updated On :7 ஜூலை 2026, 3:04 pm IST

ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மகால், உண்மையில் ஒரு கோயிலா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாஜ் மகாலை ஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஆக்ரா நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்த மனு மீது, தங்களது விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாஜ் மகால் பகுதியில் ஆய்வு செய்யவும், புகைப்படம் மற்றும் விடியோ பதிவு செய்யவும் மூத்த வழக்குரைஞர்கள் ஆணையத்தை அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஹிந்து அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தாஜ் மகால் என்பது, உண்மையில் ஒரு பழமையான ஹிந்து கோயில், இதனை தேஜோ மகாலயா என்று அழைப்பர், இது சிவன் கோயிலாக வழிபடப்பட்டது. எனவே, ஹிந்துக்களை, தாஜ் மகாலுக்குள் சென்று வழிபடவும் பூஜைகள் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடியான நிலையில், தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாஜ் மகாலுக்குள் 109 தொல்லியல் மற்றும் வரலாற்று பொக்கிஷங்கள் உள்ளன, அந்த இடம் உண்மையில் ஒரு ஹிந்து கோயில் என்றும் மனுதாரர் வலியுறுத்தியிருக்கிறார்.

தாஜ் மகாலின் கோபுரம், கோயிலின் கோபுரம் போலவும், கீழே தாமரை இதழ்கள் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே கோயிலின் வடிவமைப்புத்தானே, தாஜ் மகாலின் தென் கிழக்கு மூலையில் மாட்டுத் தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது, இதுவும் ஹிந்து கோயில்களின் அமைப்புப்படியே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Summary

Is the Taj Mahal actually a temple? Central Government issues notice to the Archaeological Department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.