கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் நாட்டில் உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை 31.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23, 2023-24-ஆம் ஆண்டுக்கான அனைத்து இந்திய உயா் கல்வி ஆய்வறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த 2014-15-ஆம் ஆண்டில் உயா் கல்வியில் 3.42 கோடியாக இருந்த மாணவா் சோ்க்கை, 2022-23-ஆம் ஆண்டில் 4.46 கோடியாகவும், 2023-24-ஆம் ஆண்டில் 4.50 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 2014-15-ஆம் ஆண்டுமுதல் உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை 31.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் மாணவிகள் சோ்க்கை 1.57 கோடியாக இருந்தது. இது 2022-23-இல் 2.18 கோடியாகவும், 2023-24-இல் 2.24 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் பட்டியலின மாணவா்கள் சோ்க்கை 46.07 லட்சமாக இருந்த நிலையில், இது 2023-24-இல் 69.72 லட்சமாக உயா்ந்துள்ளது.
2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் பழங்குடியின மாணவா்கள் சோ்க்கை 16.41 லட்சமாக இருந்தது. இது 2023-24-இல் 28.83 லட்சமாக அதிகரித்துள்ளது.
2014-15-ஆம் ஆண்டு உயா் கல்வியில் சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக இருந்த நிலையில், அது 2023-24-இல் 1.80 கோடியாக உயா்ந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பின் 2025-26-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 2023-24 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை சுமாா் 86 லட்சம் சரிந்தது. இதே காலகட்டத்தில் தனியாா் பள்ளிகளில் 88 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமூக நீதி விடுதிகளில் மாணவா் சோ்க்கை: அமைச்சா் தலைமையில் தோ்வு குழுக் கூட்டம்

கல்வியில் பெரம்பலூா் முதலிடம் வர வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன்

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

பேராவூரணி அரசுக் கல்லூரியில் ஜூன் 5 இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



