தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பயங்கரவாத முகாம்களில் கேட்ட வெடிப்பு சப்தம் உலகெங்கும் எதிரொலித்தது: பிரதமர் மோடி!

பயங்கரவாத முகாம்களில் கேட்ட குண்டுவெடிப்பு சப்தம் உலகெங்கும் எதிரொலித்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

பிரதமர் மோடி.

Updated On :9 ஜூலை 2026, 4:17 pm IST

பயங்கரவாத முகாம்களில் கேட்ட குண்டுவெடிப்பு சப்தம் உலகெங்கும் எதிரொலித்ததாக ஆஸ்திரேலியாவில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக நேற்று (ஜூலை 8) ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். இந்த நிகழ்வில், 30,000 இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசுகையில், “ஒரு கனவு நனவாகும் போது, ​​ஒரு புதிய கனவு பிறக்கிறது. ஒரு இலக்கை அடைந்தால், அதைவிட பெரிய வலிமை கிடைக்கிறது. அதிகம் வளர்ந்தால், அதிகமாக சாதிக்க முடியும் என்பதைத்தான் இந்தியா நம்பிக்கையாகக் கொண்டிருக்கிறது.

இந்தியா பல்வேறு இலக்குகளை கொண்ட 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு. இந்திய பயங்கரவாதத்திற்கு எதிராக பதிலடி கொடுத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நாங்கள் என்ன செய்தோம் என்பதை உலகமே பார்த்தது. பயங்கரவாத முகாம்களில் கேட்ட குண்டுவெடிப்பு வெடி சப்தம் உலகெங்கும் எதிரொலித்தது.

இங்கு மக்கள் ஆவலாகவும் பொறுமையின்றியும் இருக்கிறார்கள். நாம் உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இருக்கிறோம். ஆனால் கூடிய விரைவில் உலகின் முதல் மூன்று இடங்களை எட்டிவிடுவோம்.

இந்தியா 5ஜி தொழில்நுட்பத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. இந்தியா மேட் இன் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர் ஆல்பனீஸ் எங்களை வரவேற்ற விதம் பிரமிக்க வைக்கிறது” என்றார்.

Summary

Addressing the Indian community in Melbourne, Prime Minister Narendra Modi said Operation Sindoor showcased India's military strength and global defence credibility.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.