பிகாரில் முறைகேட்டில் ஈடுபட்டு பணி நியமனம் பெற்றதாக 3,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிகாரில் போலியான பட்டங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை அளித்து 3,000 ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியது.
விசாரணையில், 2006 முதல் 2015 இடையிலான காலகட்டத்தில் போலி கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட போலியான பட்டங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை அளித்து சுமார் 3,000 ஆசிரியர்கள் முறைகேடாகப் பணி நியமனம் பெற்றிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, முறைகேடாக பணி நியமனம் பெற்ற 3,000 ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி, ஆசிரியர்களின் பணிக்காலத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை வட்டியுடன் மாநில கல்வித்துறை திரும்ப பெறவுள்ளது.
இதனிடையே, விசாரணையின்போதே ஆசிரியர்கள் சிலர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக முன்னரே ராஜிநாமா செய்துள்ளனர். இருப்பினும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Summary
Bihar to dismiss over 3,000 teachers hired using fake degrees, forged certificates to secure jobs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










