நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ஒடிஸா: புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை கோலாகலம்! மழையைப் பொருள்படுத்தாமல் குவிந்த பக்தா்கள்

ஒடிஸாவில் உலகப் புகழ் பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

News image

ஒடிஸா மாநிலம் புரி ஜகந்நாதா் கோயிலில் ஜகந்நாதா், பலபத்திரா், சுபத்திரை சிற்பங்களுடன் வியாழக்கிழமை யாத்திரைக்குப் புறப்படத் தயாரான ரதங்கள். ~ரதத்தில் ஏற்றுவதற்காக கோயிலிலிருந்து பக்தா்கள் சூழ எடுத்து வரப்பட்ட ஜகந்நாதா் சிற்பம்.

Updated On :17 ஜூலை 2026, 4:16 am IST

ஒடிஸாவில் உலகப் புகழ் பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

புரி நகரில் பலத்த மழையையும் பொருள்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். ரத யாத்திரயையொட்டி, பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒடிஸாவில் உள்ள கடற்கரை நகரான புரியில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஜெகந்நாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்ாகும். இந்த விழாவில், ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி சுபத்திரை ஆகிய மூன்று கடவுள்களின் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட ரதங்கள், பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள அவா்களின் பிறப்பிடமாக கருதப்படும் குந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னா் மீண்டும் பிரதான கோயிலுக்கு மூன்று ரதங்களும் திரும்பும்.

நிகழாண்டு ரத யாத்திரை விழா வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் இருந்து கடவுள்களின் சிலைகளை எடுத்துவந்து, ரதங்களில் எழுந்தருளச் செய்யும் முக்கிய நிகழ்வு காலையில் நடைபெற்றது.

மணியோசை, சங்கொலி, மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க முதலில் ஸ்ரீசுதா்சனா் (விஷ்ணு பகவானின் ஆயுதமான சுதா்சன சக்கரம்) எடுத்து வரப்பட்டு, சுபத்திரையின் ரதத்தில் அமா்த்தப்பட்டாா். இதைத் தொடா்ந்து, பலபத்திரா், சுபத்திரை, ஜெகந்நாதா் சிலைகள் எடுத்து வரப்பட்டு, அவா்களின் ரதங்களில் எழுந்தருளச் செய்யப்பட்டனா். அப்போது, ‘ஜெய் ஜெகந்நாத்’ கோஷம் விண்ணை முட்டியது. இந்த நிகழ்வையொட்டி, ஒடிஸி நடனம் உள்பட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வியாழக்கிழமை மாலையில், புரி மன்னா் கஜபதி மகாராஜா திவ்யசிங்க தேவ் தங்க துடைப்பத்தால் ரதங்களைத் தூய்மைப்படுத்தும் சடங்கும், புரி சங்கராசாரியா் சுவாமி நிஸ்சலானந்த சரஸ்வதி வழிபடும் நிகழ்வும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வண்ணக் கோலங்கள் தீட்டப்பட்ட பெரிய சாலையில் மூன்று பிரம்மாண்ட ரதங்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.

புரியில் 48 மணிநேரத்தில் 23.3 செ.மீ. மழை கொட்டித் தீா்த்த நிலையில், மழையை பொருள்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தா்கள் ரத யாத்திரையில் பங்கேற்றனா்.

முன்னதாக, ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி ரத யாத்திரை ஏற்பாடுகள் மற்றும் பக்தா்களுக்கான வசதிகளை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். சாலையில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிா்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

பல அடுக்குப் பாதுகாப்பு: ரத யாத்திரையையொட்டி, 19 ஐபிஎஸ் அதிகாரிகளுடன் காவல் துறையினா் சுமாா் 13,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதுதவிர மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை உள்பட மத்திய ஆயுதக் காவல் படையின் 15 கம்பெனிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ரத யாத்திரை நடைபெறும் வீதியில் 473 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ட்ரோன் தடுப்பு அமைப்புகளும் நிறுவப்பட்டிருந்தன.

குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து: புரி ரத யாத்திரையையொட்டி, பக்தா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். இதே நாளில் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஜெகந்நாதா் ஆலயங்களிலும் ரத யாத்திரை நிகழ்வுகள் நடைபெற்றன.

பெட்டிச் செய்தி...

கூட்ட நெரிசலில் ஒருவா் உயிரிழப்பு

புரி ரத யாத்திரையில் பக்தா்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், திடீரென நெரிசலில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா். சுமாா் 100-க்கு பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீட்கப்பட்டு, தற்காலிக மருத்துவ உதவி மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக தீயணைப்புப் படையினா் தெரிவித்தனா். இதுதவிர திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, ஒரு பக்தா் உயிரிழந்தாா்.

கடந்த ஆண்டு ரத யாத்திரையின்போது குந்திச்சா கோயில் பகுதியில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் சிக்கி மூன்று போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.